இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் பாராளுமன்றம் முன்பு மக்கள் கூட்டத்துக்குள் காரை விட்டு மோதி தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். அதில் 4 பேர் பலியாகினர்.
அது போன்ற சம்பவம் நேற்று பெல்ஜியம் நாட்டில் நடந்தது. அங்கு ஆன்ட்வெர்ப் என்ற துறைமுக நகரம் உள்ளது. இங்குள்ள மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது வேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அக்காரை மடக்க பிடித்னர்.
அவரது பெயர் முகமது ஆர். (39). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். அவரது காரில் இருந்து கத்திகள், துப்பாக்கி, கியாஸ் கேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மக்கள் கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் வரவில்லை என தெரிய வந்தது.
அவர் குடிபோதையில் இருந்ததாகவும், போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். மேலும் இவர் துனிசியாவை சேர்ந்தவர் என்றும், பெல்ஜியம் எல்லை அருகே லென்ஸ் என்ற பிரான்ஸ்நகரில் தங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.