ஆஸ்திரேலியா நாட்டின் வடகிழக்கில் உள்ள குவீன்ஸ்லாந்து பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் (185 மைல்) வேகத்தில் முன்னேறிவரும் இந்த அசுரப் புயலுக்கு ‘டெபி’ என பெயரிடப்பட்டுள்ளது.
குவீன்ஸ்லாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான விட்சன்டே தீவுகளை சூறையாடிவிட்டு முன்னேறி வரும் டெபி புயலின் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இங்குள்ள டவுன்ஸ்வில்லி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரை பேரிடர் மேலாண்மை குழுவினர் அவசரமாக வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
குவீன்ஸ்லாந்து பகுதியை இன்னும் சிலமணி நேரங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த புயலால் இங்குள்ள மக்கே, ஹே பாயின்ட் பகுதியில் உள்ள துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல், அபாட் பாயின்ட் துறைமுகத்தில் உள்ள நிலக்கரி முனையமும் மூடப்பட்டுள்ளது. மிக மோசமான அபாய அறிவிப்பான ஐந்தாம் எண்ணால் அடையாளம் காட்டப்பட்டுள்ள இந்த அசுரப் புயல் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுவதால் புயல் தாக்கவுள்ள பகுதிகளுக்கு எரிபொருள் மற்றும் உணவு வகைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படுகிறது.
எவ்வித அசம்பாவிதத்தையும் சமாளிக்கும் வகையில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன