செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தோனேசியா நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தோனேசியா நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தோனேசியா நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தோனேசியா நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

1 minutes read

இந்தோனேசியா நாட்டில் மனிதனை விழுங்கக்கூடிய மலேசிய வகை மலைப்பாம்புகள் அதிகம் உள்ளன.

இங்குள்ள சுலவேசி தீவில் அக்பர் (வயது 25) என்ற வாலிபர் பாமாயில் தோட்டத்துக்கு காய் பறிப்பதற்காக சென்றிருந்தார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். எனவே, அவரை மற்றவர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில அந்த தோட்ட பகுதியில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று இரையை விழுங்கி உடல் பெருத்த நிலையில் படுத்திருந்ததை கண்டனர். அக்பரை அந்த பாம்புதான் விழுங்கி இருக்க வேண்டும் என கருதினார்கள்.

எனவே, அந்த பாம்பை பிடித்து வயிற்றை அறுத்தார்கள். உள்ளே அக்பரின் உடல் இருந்தது. உடலை வெளியே எடுத்தனர்.

இந்த பாம்பு 23 அடி நீளம் இருந்தது. பொதுவாக மலைப்பாம்புகள் மனிதனை விழுங்குவதில்லை. மனிதனை கண்டால் ஒதுங்கியே இருக்கும். வேறு உணவு கிடைக்காத நேரத்தில் அவை மனிதனை விழுங்குகின்றன.

இந்த பாம்பின் உடலில் இருந்து அக்பரை வெளியே எடுத்த காட்சியை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.