மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே நடந்த விபத்தில் வேலைக்காக சென்ற லாரியில் சென்ற தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் விஜயபுராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் புனேயில் உள்ள தொழில் பேட்டையில் பணி புரிகின்றனர். வழக்கம்போல் இவர்கள், பாரவூர்தியில் புனே நோக்கி சென்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் சென்றபோது, புனே – பெங்களூரு பிரதான வீதியில் சென்ற பாரவூர்தி இன்று (10.04.2018 செவ்வாய்க்கிழமை) விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த 18 பேர் பலியாகினர். இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது” என தா இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பாரவூர்தி விபத்தில் 35 பேர் பயணம் செய்துள்ளனர். பாரவூர்தி தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் குழந்தைகள் என 18 பேர் பலியாகினார்கள்.
