செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் நடிகை!

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் நடிகை!

1 minutes read

டோனி’ படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. இவர், சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக இருக்கிறார். திஷா தனது காதலர் டைகர் ‌ஷராப்புடன் நடித்த ‘பாகி-2’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தனது சினிமா அனுபவம் பற்றி திஷாபதானி இப்படி கூறி இருக்கிறார்….

“நான் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு சினிமா நடிகையாகும் ஆசையில் மும்பைக்கு தனியாக வந்தேன். வெறும் 500 ரூபாய் தான் அப்போது என்னிடம் இருந்தது. அதுவும் செலவாகிவிட்டதால் கையில் காசு இல்லாமல் அவதிப்பட்டேன்.

மும்பை வந்த புதிதில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். இதற்காக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். இதற்காகவே வேலைக்கு சென்றேன். சம்பாதித்தேன். வீட்டில் தூங்கினேன். இதுதான் அப்போது எனது வாழ்க்கையாக இருந்தது.

நான் ஒரு படத்தில் அறிமுகமாக இருந்தேன். அது தொடங்கும் போது என்னை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தார்கள். படத்தில் இருந்து என்னை நீக்கியது எனக்கு பலத்தை கொடுத்தது. பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. நான் பாசிட்டிவாக எதையும் எடுத்துக்கொள்வேன்.

நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தேன். என் படம் ஓடுமா? அடுத்த வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியாது. எனவே நான் எச்சரிக்கையாக இருக்கிறேன்”.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.