அமெரிக்காவிற்கு அருகில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு கியூபா. இது கரீபியன் கடலில் அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் இருக்கும் இந்நாட்டில் மறைந்த புரட்சியாளரான பிடல் கெஸ்ட்ரோ சுமார் 30 ஆண்டுகள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்தார்.
அவருக்கு பின் அவருடைய சகோதரர் ராஹுல் கெஸ்ட்ரோ சுமார் 10 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்தார். 87 வயதான ராஹுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்ததை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில், துணை ஜனாதிபதியான மிக்வெல் டயாஸ் ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. எனவே, மிக்வெல் டயாஸ் கனல் போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளாக கெஸ்ட்ரோ குடும்பத்தினர் ஜனாதிபதியாக இருந்த நிலையில், அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
