35 வருடங்களுக்கு பிறகு புதுப் பொலிவுடன் தமிழில் ‘சங்கராபரணம்’35 வருடங்களுக்கு பிறகு புதுப் பொலிவுடன் தமிழில் ‘சங்கராபரணம்’

35 வருடங்களுக்குப் பிறகு சங்கராபரணம் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது.

தெலுங்கில் 1979–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘சங்கராபரணம்’. பரத நாட்டியத்தையும், இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்தக்கதையில் ஆபாசம், வன்முறை என எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும், அதுவும் மொழி புரியாதவர்களையும் கூட அழ வைத்தது. இந்தப் படம் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கியிருந்தார். சோமையாஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் இசை மாமேதை கே.வி.மகாதேவன். தற்போது ‘சங்கராபரணம்’ படத்தை சினிமாஸ்கோப் மற்றும் டிஜிட்டலில் புதுப்பித்து தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

தமிழ் பதிப்புக்காக ரவிராகவ் என்பவர் புது வடிவத்துடன் இசையமைத்துள்ளார். ஸ்ரீசபரிகிரி வாசன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக பி.எஸ்.அரிகரன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது.

Sankarabharanam

ஆசிரியர்