டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன்!டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன்!

 

சிவாஜி நடித்த கர்ணன், பாசமலர் படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வெளியானதைத் தொடர்ந்து கமல்-ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படமும் வெளியானது. அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படமும் தற்போது டிஜிட்டல் வடிவம் பெற்று திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறுகிறதாம். 1965ல் திரைக்கு வந்த இப்படம் எம்.ஜி.ஆரின் வசூல் சாதனை படங்களில் முக்கியான படம் என்பதோடு, இப்போதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலித்துக்கொண்டிருக்கிறது.

அதனால்தான் அப்படத்தையும் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் இணைத்து மீண்டும் ரசிகர்களை கண்டுகளிக்க வைக்கப்போகிறார்களாம். ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படம், கர்ணன், பாசமலர் படங்களைக்காட்டிலும் அதிக வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்