கேடயம் | மக்களோடு மக்களாக படமாக்கப்பட்ட படம்கேடயம் | மக்களோடு மக்களாக படமாக்கப்பட்ட படம்

‘அழைப்பிதழ்’ படத்தின் இயக்குனர் ராஜ் மோகன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘கேடயம்’.

ஒரு கொலை வழக்கில் சரண்டராகும் இளைஞனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் முடிவதாக விறுவிறுப்பாக ஒரே நாளில் நடக்கிறது இந்த படத்தின் கதை.

கதை பயணிக்கும் லொகேஷன்களான கொரட்டூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் பல கேமராக்களை மறைத்து வைத்து, படத்தின் கதாபாத்திரங்களை மக்களோடு மக்களாக கலந்து யதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இப்படத்தின் பாடல் காட்சிகளும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தியாகராயா நகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

ஹீரோவாக விஜய்ராஜ் நடிக்க, ஹீரோயினாக ஸ்ருதி நடிக்கிறார். வில்லனாக தங்கதிருப்பதி நடிக்கிறார். இவர்களுடன் அனிக்ஷா, தில்லைமணி, அப்சர் பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ராஜ்மோகன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். சங்கீத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரகுபதி இசையமைக்கிறார். படத்தினை வெங்கடாச்சலபதி பிலிம்ஸுடன் இணைந்து அங்ககாரகன் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

ஆசிரியர்