80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கெளதமி.
ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், இறுதியாக 2006ஆம் ஆண்டு வெளியான ‘சாசனம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு என்னமோ தெரியவில்லை நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் கௌதமி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வரும் அவர், மலையாள படம் ஒன்றில் நடிக்க ஓகே சொல்லியும் விட்டாராம்.
கெளதமி இது குறித்து கூறுகையில், மீண்டும் நடிப்பது குறித்து, யோசித்து வருகிறேன். இன்னும் சில மாதங்களில், அதுபற்றி முடிவெடுப்பேன், நிச்சயமாக நல்ல மெச்சூர்டு பாத்திரங்களே பண்ணுவேன் என்றார்.