நண்பருக்காக கமல் எழுதி, பாடிய பாடல்நண்பருக்காக கமல் எழுதி, பாடிய பாடல்

நண்பருக்காக கமல் ஹாசன் பாடல் ஒன்றை எழுதி, பாடவும் செய்திருக்கிறார்.

‘உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா, தர்மயுத்தம், சிறை, மனக் கணக்கு, கூட்டுப் புழுக்கள், தாலி தானம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர்.சி. சக்தி. தற்போது இவர் ‘ரோஜாக்கள் ஐந்து’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தை அவருடைய மூத்த மகள் சாந்தி தயாரிக்க பேரக் குழந்தைகள் ஐந்து பேர் நடித்திருக்கிறார்கள்.

இதில் கமல் ஹாசன் ஒரு பாடலைப் பாடி இருக்கிறாராம். ஆர்.சி. சக்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க கமல் ஹாசன், அவரே ஒரு பாடலை எழுதி பாடவும் செய்திருக்கிறார். இந்த பாடலுக்கு 80களில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்த ஷ்யாம் இசையமைத்திருக்கிறார்.

கமல் ஹாசன், ஆர்.சி. சக்தி இருவரும் பல வருடங்களாக இணைபிரியாத நண்பர்கள். ஆர்.சி. சக்தி இயக்கத்தில் கமல்ஹாசன் ஆரம்ப காலங்களில் ‘உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மனிதர்களிடையே வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. தவறு செய்தவன் திருந்தினால் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் படம் இது.

ஆசிரியர்