மங்காத்தாவிற்கு பிறகு பில்லா-2 தோல்வியடைந்தபோதும், ஆரம்பம், வீரம் படங்களின் ஹிட் காரணமாக கோடம்பாக்கத்தில் காலறை தூக்கி விட்டு நடக்கிறார் அஜீத். இந்த நிலையில், இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர், புதிய கதைகளை ரொம்ப கவனமாக செலக்ட் பண்ணுகிறார்.
என்னதான் தன்னை வைத்தே ஹிட் கொடுத்த இயக்குனர்களாக இருந்தாலும், கதை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதை முன்வைத்தே கேட்கத் தொடங்குகிறார் அஜீத். அந்த வகையில், ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா இரண்டு பேருமே மீண்டும் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், கதையை உள்வாங்கிக்கொண்ட அஜீத், இன்னும் முடிவு சொல்லவில்லையாம். அதேசமயம், தற்போது அனேகன் படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த் சொன்ன கதை அஜீத்துக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். இந்த கதைதான் ரஜினிக்காக அவர் உருவாக்கிய கதையாம். அதனால் கதையில் எந்த திருத்தமும் சொல்லாமல் அப்படியே இருக்கட்டும் என்று ஓ.கே சொல்லி விட்டாராம் அஜீத்.
ஆக, மார்ச் இறுதியில் கௌதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்தை முடித்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதை இப்போதே முடிவு செய்துவிட்டார். இவ்வாண்டு இறுதியில் அப்படமும் தொடங்கப்பட்டு விடுமாம்.