சாதனை படைத்த கமலின் உத்தம வில்லன் டீஸர்!சாதனை படைத்த கமலின் உத்தம வில்லன் டீஸர்!

உத்தம வில்லன் திரைப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தில் 4 டீன் ஏஜ் வயது பெண்களின் தகப்பனாராக நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பூஜாகுமார் மற்றும் அண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் டூயட் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது படத்தின்  டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த டீஸர் வெளியான 34 மணி நேரத்தில் 2,51,000 ரசிகர்களுக்கும் மேல் அதை பார்த்துள்ளனர். மேலும் படத்தின் முதல் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ‘உத்தம வில்லன்’ என்ற டைட்டிலை வில்லு பாட்டில் பயன்படுத்தும் இசை கருவியான வில்லின் வடிவத்தில் அமைத்திருப்பதை பார்க்கும்போதும், அந்த காலத்து கூத்து கலைஞர்களின் முக ஒப்பனையை நினைவுப்படுத்துகிற மாதிரியான கமலின் படம் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்போதும், இது சரித்திர கால கதையை பின்னணியாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசன்,  மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதுவரை கமல் படத்தில் விவேக் நடித்ததில்லை. கே.பாலச்சந்தரின் மாணவர்கள் இருவரும் இப்படத்தில் இணைகிறார்கள்.

ஆசிரியர்