2010-ல் இந்தியில் வெளியான இஷ்கியா படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். வித்யாபாலன், அர்ஷத் வர்ஷி, நஸ்ருதின் ஷா நடித்த இஸ்கியா இந்தியில் பாராட்டையும் வசூலையும் பெற்ற படம். அதன் சீக்வெல் டெட் இஷ்கியா என்ற பெயரில் இந்த வருடம் வெளியானது. இதில் வித்யாபாலனுக்குப் பதில் மாதுரி தீட்ஷித் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கிறது. இரண்டு மொழிகளிலும் வித்யாபாலன் நடித்த வேடத்தை லட்சுமி ராய் செய்வார் என தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இருப்பதால் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை என லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.
0