எனது பாடலை திருடினார் ஜி.வி.பிரகாஷ்!! என்கிறார் பாப் பாடகர் எனது பாடலை திருடினார் ஜி.வி.பிரகாஷ்!! என்கிறார் பாப் பாடகர்

பிரபல தமிழ் பாப் பாடகர் ஆர்யன் தினேஷ், இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார். விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் என்ற படத்துக்காக தன்னுடைய பாடல் ஒன்றை திருடி, அந்த பாடலை நா. முத்துக்குமார் எழுதியதாகவும், அதை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்ததாகவும் மோசடி செய்துள்ளார் என ஆர்யன் தினேஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தன்னை அழைத்து, விஷாலின் நான் சிகப்பு மனிதன் என்ற படத்திற்காக ஒரு ராப் பாடல் வேண்டும் என்றும் அதை எழுதி என்னையே பாடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அதன்படியே நான் லவ்லி லேடீஸ் என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதி அதை ஒலிப்பதிவு செய்து அதன் சீடியை ஜி.வி.பிரகாஷிடம் கொடுத்தேன். பாடல் பிடித்திருந்தால், தகவல் சொல்லுங்கள், நானே வந்து பாடிக்கொடுக்கின்றேன் என்றும் கூறியிருந்தேன்.

சில நாட்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ் எனக்கு போன் செய்து என்னுடைய பாடலும், மெட்டும் தயாரிப்பாளர் விஷாலுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் நா.முத்துக்குமாரிடம் வேறு பாடலை எழுத சொல்லிவிட்டோம் என்று எனக்கு தகவல் கொடுத்தார். அதன்பின்னர் நான் அந்த பிரச்சனையை மறந்துவிட்டேன்.

aaryan-dinesh-k-21

சமீபத்தில் நான் சிகப்பு மனிதன் பாடல் வெளியானது. அதில் என்னுடைய பாடல் ஒரு வரி கூட மாறாமல் அப்படியே இருந்தது. மேலும் அந்த பாடலை நா. முத்துக்குமார் எழுதியதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்ததாகவும், கானா பாலா பாடியதாகவும் தகவல் இருந்தது. அதுமட்டுமின்றி நான் பாடிய சில வரிகளும் அப்படியே உபயோகிக்கப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் பாடிய்வர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றது. ஆனால் எனக்கு இதுகுறித்து எவ்வித தகவலும் கொடுக்கவில்லை. எனக்கு சேரவேண்டிய சம்பளமும் கொடுக்கவில்லை.

அந்த பாடலை ஒரிஜினலாக நான் எழுதியிருக்க என்னிடம் அனுமதி பெறாமல் என்னுடைய இசையை திருடி ஜி.வி.பிரகாஷ் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்” என்று கூறியுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

ஆசிரியர்