ஏ.ஆர்.முருகதாஸ்க்கு டோஸ் கொடுத்த ஷங்கர்!ஏ.ஆர்.முருகதாஸ்க்கு டோஸ் கொடுத்த ஷங்கர்!

இயக்குனர் ஏ,ஆர். முருகதாஸின் அஸிஸ்டன்ட் திருகுமரன் இயக்கத்தில் வெளியான படம் மான்கராத்தே. இந்த படத்தில் ஒரு காட்சியில் பப்பில் இருந்து ஆடிக்கொண்டே பெண்களுடன் தள்ளாடி வருவது போல் முருகதாஸ் நடித்திருப்பார்,

இந்த சீனில் தனது அஸிஸ்ட்டன்ட் திருகுமரன் கேட்டதால் நடித்தாரா அல்லது தானாக முன்வந்து நடித்தாரா என்பது புரியவில்லை. இதுகுறித்து அறிந்ததும் ஏ.ஆர்.முருகதாஸா இப்படி ஒரு சீனில் நடித்தார் என்று சினிமா வட்டாரத்தில் பலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்த சீன் விவகாரம் குறித்து இயக்குனர் ஷங்கர், முருகதாஸிடம் போனில் கேட்டதுடன், உங்களுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, ஆனால் இப்படி போய் சின்னப்பிள்ளை மாதிரி ஆசைப்படுரீங்களே என்று சிரித்து கேட்ட அவர், இனிமேல் இப்படியெல்லாம் வந்து உங்கள் இமேஜை கெடுத்துக்காதீங்க என்று அட்வைஸ் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியர்