சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் அஞ்சான் | ஆகஸ்ட் 15ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்!சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் அஞ்சான் | ஆகஸ்ட் 15ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அஞ்சான்’.  இந்தப் படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, மஹாராஷ்டிரா, கோவா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்தி முடித்து படக்குழுவினர் திரும்பியுள்ளனர். இதையடுத்து ’அஞ்சான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இது குறித்து ’யுடிவி’ தனஞ்சயன் ‘ ‘நீங்கள் இதுவரை பார்த்திராத ஸ்டைலிஷான ஒரு சூர்யாவை இதில் பார்க்கப் போகிறீர்கள்’ என்று டுவீட் செய்துள்ளார்.

‘சிங்கம் 2’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிக்கும் படம், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், சூர்யாவுடன் முதன்முறையாக சமந்தா ஜோடி என இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பு படம் மீது கிளம்பியுள்ளது. அஞ்சான் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ஆசிரியர்