March 24, 2023 3:54 am

எங்ககிட்ட இல்லாத சொத்தா? சிம்புவை கண்டு சீறும் ஹன்சிகா அம்மா!எங்ககிட்ட இல்லாத சொத்தா? சிம்புவை கண்டு சீறும் ஹன்சிகா அம்மா!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிம்பு-ஹன்சிகாவின் காதல் கதை கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் வாலு படத்தில் நடிக்க வேண்டிய கடைசிகட்ட படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ளனர்.

அப்போது, சிம்பு-ஹன்சிகா இருவரும் வழக்கம்போல் ஹாய் சொல்லிக்கொண்டே கேமிரா முன்பு வந்திருக்கிறார்கள். ஆனால், பழைய ஒட்டுதல் இல்லையாம். இருப்பினும், உள்ளத்தில் வெறுப்பையும், உதட்டில் விருப்பையும் வைத்தபடி கடமைக்காக கனத்த இதயத்துடன் நடித்தார்களாம். தற்போது அதுவல்ல விவகாரம்.

ஹன்சிகாவுக்கும் புதுமுக நடிகர் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவி வருவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் இதுகூட சிம்பு பரப்பிவிட்டதுதான் என்று கூறப்படுகிறது. ஹன்சிகாவை பழிவாங்கவே சிம்பு மீடியாக்களிடம் இப்படி பரப்பி வருவதாக ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி சீறிக்கொண்டு இருக்கிறார்.

அதிலும், ஜெயப்பிரதாவிடம் நிறைய பணம் இருப்பதால்தான் அவரது மகன் சித்தார்த்துக்கு, ஹன்சிகா ப்ராக்கட் போடுகிறார் என்கிற செய்தி மோனா மோத்வானிக்கு பெரிய அளவில் கடுப்பை ஏற்றியிருக்கிறது. இதற்கு பதில் கூறும் வகையில் மும்பையில் எங்ககிட்ட இல்லாத சொத்தா. நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்று சூடான எண்ணயில் போட்ட கடுகு போல் வெடித்து விட்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்