Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாராதனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாரா

தனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாராதனுஷ் படத்தில் காது கேளாதவராக நயன்தாரா

1 minutes read

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் நானும் ரவுடிதான்.

இயக்குநர் விக்னேஷ் சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம். இதற்கு முன்பு போடா போடி என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அதுவும் அவர் காது கேளாதவர் கதாபத்திரத்தில் வருகிறார்.

இதற்காகவே அவர் உண்மையாக காது கேளாதவர்களுடன் பழகி அவர்களை போலவே நடிக்க முயற்சி செய்து வருகிறாராம். அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்திலும் இப்படம் உருவாகிறதாம். அதனால் தான் விஜய் சேதுபதியுடன் நடிக்க அவர் சம்மதித்து உள்ளார். ஏற்கெனவே ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள நயன்தாராவுக்கு நானும் ரவுடி தான் படமும் வித்தியாசமான கேரக்டராக இருக்கும் என்கின்றனர்.

பெரும் பகுதி படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கிறது. இதுதவிர நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், 5 வயது குழந்தைக்கு தாயாக மிட் நைட் எக்ஸ்பிரஸ், சூர்யாவுடன் மாஸ், சிம்புவுடன் இது நம்ம ஆளு என்று அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More