மானை வேட்டையாடியதாக, பொலிவூட் நடிகர் சல்மன் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவர், குற்றவாளியென, இந்த வழக்கை விசாரித்து வந்த இந்தியாவின் ஜோத்பூர் நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய நடிகைகளான தபு, சொனாலி பிந்த்ரா, நீலம் மற்றும் நடிகர் சயீப் அலி கான் ஆகியோர், இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
1998ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ’ஹம் சாத் சாத் ஹே’ என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பில் ககலந்துகொண்டிருந்த சல்மான் கான், இரவு வேட்டைக்குச் சென்றபோது, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக, முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சல்மான் கான் உட்பட 7 பேர் மீது, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2007ஆம், ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு, ஜோத்பூர் கிளை நீதிமன்றம், 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. இருப்பினும், சல்மான் கான், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், கடந்த 20 ஆண்டுகள், இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
