Tuesday, March 2, 2021

இதையும் படிங்க

தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க...

பொலிசாக நடிக்கும் அருள்நிதி

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும்' டைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கலைஞர் மு...

ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்… இளம் பெண் புகார்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல...

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.விஜய் ஆண்டனி - ஜிவி பிரகாஷ்தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை | குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.விஜய்விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்...

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...

ஆசிரியர்

’டேனி’ திரைப்பட விமர்சனம்

பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்க்கலாம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியான வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொலை செய்யப்பட, இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலே கதைக்களம் சிட்டியை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால், கிராமத்தை கதைக்களமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது, பிற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து முழுவதுமாக வித்தியாசப்படுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, இயல்பாகவே கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பதால் அவருக்கு காக்கி உடை கச்சிதமாக பொருந்துவதோடு, போலீஸ் வேடத்திலும், நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தஞ்சை மக்களுக்கே உரித்தான ஸ்டைலில் தனது கதாப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். எப்படிப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதை காவல் துறையினர் எப்படி சாதாரணமாக கையாளுகிறார்கள் என்பதை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகர், கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்.

டேனி என்ற பெயரில் வலம் வரும் நாய்க்கு தலைப்பில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படத்தில் இல்லை. டேனியை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அவரது அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கிராமத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் படம் ரொம்பவே எளிமையாக இருக்கிறது. அதே சமயம் இயல்பாகவும் இருக்கிறது. கொலைக்கான காரணமும், கொலையாளியின் பின்னணியையும் விவரிக்கும் இயக்குநர் அதன் மூலம் சொல்ல வரும் மெசஜை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இருந்தாலும், அவர் சொல்லியிருக்கும் மெசஜ் மிக முக்கியமானது.

காவல் துறையில் இருக்கும் நாய்களுக்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகள் இருப்பதோடு, ஊதியமும் வழங்கப்படுகிறது, என பல சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

சாய் பாஸ்கரன் இசை, பி.ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு, எஸ்.என்.பாசிலின் படத்தொகுப்பு அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பால் முதல் பாதி படம் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், கொலையாளி அறிமுகத்திற்குப் பிறகு திரைக்கதையின் வேகம் சற்று குறைகிறது. பிறகு கொலைக்கான காரணத்தை விவரிப்பதில் மீண்டும் திரைக்கதை சூடு பிடிக்க, இறுதியில் இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு, இயக்குநர் கொடுக்கும் தண்டனை, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

மொத்தத்தில், ’டேனி’ சூப்பரான படம் இல்லை என்றாலும், சுமார் என்பதற்கு ஒருபடி மேல் என்று சொல்லும் படமாக உள்ளது.

ரேட்டிங் 3.5

நன்றி : chennaionline.com

இதையும் படிங்க

பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய...

புகழின் அதிரடி வளர்ச்சி | குவியும் வாழ்த்துகள்

குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழின் வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி...

ஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில்...

மாரி செல்வராஜின் சிஷ்யன் இயக்கும் புதிய படம்

பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.பரியேறும் பெருமாள் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ்....

கதாநாயகியாக அறிமுகமாகும் பின்னணி பாடகி

தமிழ் திரை உலகின் முன்னணி பாடகியாக வளர்ந்து வரும் பின்னணி பாடகியான ஜொனிதா காந்தி, கதாநாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் வி. விநாயக் இயக்கத்தில் தயாராகிவரும் ...

விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன?

விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல...

தொடர்புச் செய்திகள்

சைலன்ஸ் | திரைவிமர்சனம்

நடிகர்கள்:அனுஷ்கா,மாதவன்,அஞ்சலி இயக்கம்: ஹேமந்த் மதுகர் சினிமா வகை:Thriller கால அளவு:2...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிறந்த நாள் பரிசு | சிறுகதை

“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?” “இல்ல.....

குப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ

கண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...

உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா..

சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். உங்கள் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம்...

சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி...

புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது...

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்!

2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா:உலகளவில் செவி திறன்...

சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா!

தேவையான பொருட்கள் :கோதுமை பிரெட் - 4 துண்டுகள்முட்டை - 3பெ.வெங்காயம் - 1மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்உப்பு - தேவைக்குகடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவுபச்சை...

பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய...

துயர் பகிர்வு