செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் வினோத் கிஷன் நடிக்கும் ‘பிகினிங்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் வினோத் கிஷன் நடிக்கும் ‘பிகினிங்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

ஆசியாவில் முதன் முறையாக ஸ்பிளீட் ஸ்கிரீன் எனப்படும் இரட்டை திரையில் தோன்றும் படைப்பாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘பிகினிங்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பிகினிங்’. இதில் ‘நான் மகான் அல்ல’, ‘இமைக்காநொடிகள்’, ‘குட்டி ஸ்டோரி’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வினோத் கிஷன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ’96’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கௌரி கிஷன் நடிக்கிறார். 

இவர்களுடன் மூத்த நடிகை ரோகிணி, மற்றும் நடிகர் சச்சின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வீரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார்.

ஆசியாவிலேயே முதன்முறையாக ஸ்பிளீட் ஸ்கிரீன் என்ற முறையில் தயாராகும் இந்த படத்தை லெப்ட்டி மேனுவல் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா முத்துசாமி பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரிக்கிறார்.

ஸ்பிளீட் ஸ்கிரீன் என்ற முறையில் முதன் முதலாக தமிழில் இந்தப் படம் உருவாகுவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘பிகினிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பு, கருப்பு வெள்ளை வண்ணத்திலும், நடிகர்களின் தோற்றம் வண்ணத்திலும் இடம்பெற்றிருப்பதால் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.