செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சரத்குமார் நடிக்கும் ‘பரம்பொருள்’

சரத்குமார் நடிக்கும் ‘பரம்பொருள்’

1 minutes read

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘பரம்பொருள்’ என பெயரிடப்பட்டு, அதன்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானவர் அமிதாஷ் பிரதான். 

இவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பரம்பொருள்’. இவருக்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா நடித்திருக்கிறார். 

முக்கிய வேடத்தில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். 

கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சி. அரவிந்த் ராஜ். கவி கிரியேஷன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் மற்றும் கிரீஷ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார்.

‘பரம்பொருள்’ என்ற வித்தியாசமான தலைப்பின் காரணமாகவும், சிலை கடத்தல் மையப்படுத்திய திரில்லர் கலந்த கிரைம் திரைக்கதை என்பதாலும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், மோஷன் போஸ்டருக்கும் இணையவாசிகளிடம் ஆதரவும் கிடைத்துவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.