Sunday, May 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை ஸ்ரேயா சரணின் ‘கப்ஜா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை ஸ்ரேயா சரணின் ‘கப்ஜா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் தயாராகிவரும் ‘கப்ஜா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கதாசிரியரும், இயக்குநருமான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கப்ஜா’. இதில் கன்னடத்தின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். 

நடிகை ஸ்ரேயா சரண் மதுமதி என்ற சரித்திர காலகட்டத்திய மகாராணி வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, கபீர் துகான் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

Prakash Raj Shows His Gratitude Towards Samuthirakani By Dedicating His  Award - YouTube

ஏ ஜே ஷெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு,’ கே ஜி எஃப்’ பட புகழ் இசையமைப்பாளர் ரவி பர்ஸூர் இசையமைக்கிறார்.

கன்னட மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஒரியா, மராத்தி, இந்தி என ஏழு மொழிகளிலும் ஒரே தருணத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ சித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

இந்த ஆண்டிற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘கப்ஜா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ஸ்ரேயா சரண் மகாராணி தோற்றத்தில் கம்பீரமாகவும், அந்தக் காலகட்டத்திய ஆடை அணிகலனுடன் தோன்றுவதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More