செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அடுத்த சம்பவத்துக்கு தயாரான பீஸ்ட்

அடுத்த சம்பவத்துக்கு தயாரான பீஸ்ட்

0 minutes read

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் எதிர்ப்புகளும் வரவேற்பும் பெற்று வருகிறது.

இதற்குமுன்பு இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலும் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள மூன்றாவது பாடலை படக்குழு நாளை வெளியிடவுள்ளது.

இதனை அறிவிக்கும் விதமாக ”அடுத்த சம்பவம் லோடிங்” என்று சமூக வலைத்தளத்தில் படக்குழு பதிவிட்டு அறிவித்துள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.