செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வைரலாகும் சீதா ராமம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வைரலாகும் சீதா ராமம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

0 minutes read

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் சல்யூட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

இதில் ராணுவ அதிகாரியாக ராம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதில் மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

வைஜயந்தி பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை தயாரிக்கிறார். 

இந்நிலையில் சீதா ராமம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.