செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ‘இரவின் நிழல்’

சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ‘இரவின் நிழல்’

1 minutes read

நடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘இரவின் நிழல்’ திரைப்படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற வகையில் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனத்தை கவர்ந்த இயக்குநரும், நடிகருமான ஆர் பார்த்திபன் அடுத்ததாக ‘இரவின் நிழல்’ என்ற பெயரில் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். உலக அளவில் முதன் முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் என்ற வகையில் தயாராகி இருக்கும் இந்த படத்தை பார்வையிட்ட ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் சாதனை புத்தகத்தில் ‘இரவின் நிழல்’ படைப்பிற்கு இடமளித்திருக்கிறது. இந்தத் தகவலை ஆர். பார்த்திபன் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய டிவிட்டரில் ஆர் பார்த்திபன் பதிவிட்டிருப்பதாவது.. ” தனித்துவமான முயற்சியை அங்கீகரித்து இரு அமைப்புகளுக்கும் நன்றி” என பதிவிட்டிருக்கிறார்.

‘ஓஸ்கர் புயல்’ ஏ ஆர் ரகுமான் இசைறமைத்திருக்கும் ‘இரவின் நிழல்’ படத்தின் ஓடியோ வெளியீடு விரைவில் நடைபெறவிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.