Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வடிவேலு வெளியிட்ட மாரி செல்வராஜ் நூல்

வடிவேலு வெளியிட்ட மாரி செல்வராஜ் நூல்

1 minutes read

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதன் பின் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 


இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே சில நூல்களை எழுதி எழுத்தாளர் என்ற பட்டத்தையும் சூட்டியிருந்தார்.

இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நூல்களை தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியாகியிருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேல் வெளியிட்டுள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More