தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் தமிழில் அறிமுகமாகும் ‘தி வாரியர்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘புல்லட்’ எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியாகியிருக்கிறது.

இதனை நடிகரும், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வெளியாக விருக்கும் புதிய திரைப்படம் ‘திவாரியர்’.

இதில் தெலுங்கின் முன்னணி நடிகரானராம் பொத்தனேனி தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் பாரதி ராஜா , ஆதி , நதியா ,ரெடின் கிங்ஸ்லி , அக்ஷராகவுடா , சிராக் ஜானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும்இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீனி வாசாசில்வர்ஸ்கிரீன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனி வாசா சித்தூரி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் நிறை வடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ‘புல்லட்..’ எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது.
இதனை பாடலாசிரியர் விவேகா எழுத ‘மாநாடு’ புகழ் நடிகரும், பாடகருமான சிலம்பரசன், பின்னணி பாடகி ஹரிப்பிரியா உடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.இப்படத்தின் பாடல் நேற்று இணையத்தில் வெளியானது.
வெளியான குறுகிய நேரத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
‘ புல்லட்..’ எனத் தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களின் இளமை கீதமாக பிரபலமாகும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.