‘பிக்பொஸ்’ பிரபலமும், நடிகருமான கவின் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘ டாடா ‘ என பெயரிடப்பட்டு,அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் கணேஷ் கே . பாபு இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘டாடா ‘. இதில் நடிகர்கவின் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ பட புகழ் நடிகை அபர்ணாதாஸ் நடிக்கிறார்.
இவர்களுடன் கே . பாக்யராஜ், ஹரிஷ், பிரதீப் அண்டனி , நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் சில தருணங்களிலாவது ‘டாடா ‘ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்போம்.
இந்த வார்த்தைக்கும் படத்தின் திரைக்கதைக்கும் பொருத்தம் இருப்பதால் இதனையே தலைப்பாக வைத்தோம்.” என்றார்.
படத்தின் முதற்கட்ட படப் பிடிப்பு நிறை வடைந்து இரண்டாம் கட்ட படப் பிடிப்பு தொடங்கவிருக்கும் வேளையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் நடிகர் கவின் தன்னுடன் ஒரு குழந்தையை சுமந்துகொண்டு கூட்டத்தில் நடந்து வருவதுபோல் தோன்றுவதால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.