செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மிஷ்கினின் ‘பிசாசு 2’ டீசர் வெளியீடு

மிஷ்கினின் ‘பிசாசு 2’ டீசர் வெளியீடு

1 minutes read

நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘பிசாசு2’ படத்தின் டீசர் வெளியானது.

‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பிசாசு 2’. இதில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார். 

அவருடன் அச்சு மணி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி விரிவுபடுத்தப்பட்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். 

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 இந்த டீஸரை தமிழில் எஸ் ஜே சூர்யாவும், மலையாளத்தில் நடிகைமஞ்சு வாரியரும் வெளியிட்டனர். 

2014ஆம் ஆண்டில் வெளியான ‘பிசாசு’ படத்தின் முதல் பாகத்தில் ஆவியை நேர்மறையாக சித்தரித்த இயக்குநர் மிஷ்கின், ‘பிசாசு 2’ படத்திலும் வித்தியாசமாகவே சித்தரித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 இருப்பினும் டீஸரில் ஒரு பெண்ணின் நிர்வாண ஓவியம், விஜயசேதுபதியின் குயவன் கதாபாத்திரம் போன்றவை ‘பிசாசு 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.