செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு,’குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக ‘அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாடலாசிரியர், பாடகர், நடன வடிவமைப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறமைக்கொண்ட தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படம் ‘குஷி’. 

இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ஆலி, ரோகிணி, வெண்ணாலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார் சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜி முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹிஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

நகைச்சுவையும் காதலும் கலந்து உருவாகியிருக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

காஷ்மீரில் முதற்கட்ட படபிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் தோற்றம் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ‘குஷி’ உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். 

‘குஷி’ தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதியன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.