Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆர்யாவின் ‘கேப்டன்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

ஆர்யாவின் ‘கேப்டன்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கேப்டன்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கேப்டன்’. இதில் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் சிம்ரன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் கேப்டன் திரைப்படம்  செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியன்று தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘சர்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த ‘கேப்டன்’ வசூலில் வெற்றி பெற்று, நடிகர் ஆர்யாவிற்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More