செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ஆர்.கே. சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

நடிகர் ஆர்.கே. சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’

1 minutes read

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' திரைப்படம் - touringtalkies

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி ஆர். கே. சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜேனரில் தயாராகும் ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் தமிழக காவல் துறை தலைவரான ஜாங்கிட் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பலர் பங்குபற்றி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ அரசாங்க வைத்தியசாலையகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது.” என்றார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.