செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆர் பார்த்திபனின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

ஆர் பார்த்திபனின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

2 minutes read

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன் நடிப்பில் தயாராகியிருக்கும் முதல் வலைத்தளத் தொடரான ‘சுழல்= தி வோர்டெக்ஸின் முன்னோட்டம் வெளியானது. இந்த தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் முப்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் முதன்முதலாக வெளியாகும் தமிழ் வலைத்தளத் தொடராகும். 

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. ‘குற்றம் கடிதல்’ படப்புகழ் இயக்குநர் பிரம்மா மற்றும் ‘கிருமி’ படப்புகழ் இயக்குநர் எம். அனுசரண் இணைந்து இயக்கியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியாகும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. 

இதற்காக நடைபெற்ற விழாவில் பங்குபற்றி ஆர். பார்த்திபன் பேசுகையில்,“ 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில் தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைதள தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் எம்மைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

எம்முடைய கலாச்சாரத்தில் ஒரு  புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு? என்ற அநத கதையில், ஞானப்பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

அந்தக் காலத்தில் சிவாஜியை விட மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும். ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சி தானே. 

இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.