செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை | பிரபுதேவா

நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை | பிரபுதேவா

2 minutes read

“இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் சொன்ன கதையும், கதை சொன்ன விதமும் பிடித்திருந்ததால் தான், ‘பொய்க்கால் குதிரை’ படத்தில் நடித்தேன். இந்த படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாடும் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் நடிப்பதற்கு சவாலாகவும், கடினமாகவும் இருந்தது.” என அப்பட நாயகன் நடனப்புயல் பிரபுதேவா தெரிவித்தார்.

‘ஹரஹர மஹாதேவகி‘, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம்‘ பொய்க்கால் குதிரை’.இதில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஓகஸ்ட் 5 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

பிரபுதேவா பேசுகையில்,“ இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சிக்கான படபிடிப்பு வரும்போது நடனமாடும் எமக்கு, இந்த படத்தில் மிகவும் சிரமப்பட்டு, கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது. ஆனால் ஒற்றைக்காலுடன் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்கு எமக்குத் தான் சற்று சிரமமாக இருந்தது.

சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும்.

இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது.

விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொணர்ந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.