செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் கமலுடன் இணையும் உதயநிதி

மீண்டும் கமலுடன் இணையும் உதயநிதி

1 minutes read

‘மாமன்னன்’ படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.