Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பத்து தல பட புதிய அப்டேட்

பத்து தல பட புதிய அப்டேட்

1 minutes read

பத்து தல படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இதனை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More