Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ‘சீயான் 62’இல் இணைந்த ‘நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா

‘சீயான் 62’இல் இணைந்த ‘நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா

1 minutes read

தமிழ் சினிமாவின் உலகளாவிய நட்சத்திர அடையாளமாக வலம் வரும் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகிவரும் ‘சீயான் 62’ எனும் படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா தெரிவுச் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த ‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சீயான் 62’ படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் நடிக்கிறார். இவருடன் அழுத்தமான வேடத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் என படக்குழுவினர் உறுதிப்படுத்தி, இதற்காக பிரத்யேக புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். தேசிய விருதுப் பெற்ற படத்திற்கு இசையமைத்த ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

சீயான் விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா முதன்முறையாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More