புதுமுக நடிகர் பிரபு ஏகாம்பரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரபு ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்தில் பிரபு ஏகாபரம், ஹரி பிரியா, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. சங்கர், எலிசபெத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபிஷேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைத்திருக்கிறார்.
கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மணமகன், மணமகள் ஆகியோரின் முதல் சந்திப்பு, இவர்களின் எதிர்பார்ப்பு, ஆகியவை இடம் பிடித்திருப்பதால்… 90 கிட்ஸ்களின் வரவேற்பை பெற்றிருப்பதுடன் ஏனைய தலைமுறை ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”90 கிட்ஸ்கள் பரிதாபங்கள் குறித்தும், குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பாக பிரதிபலிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.