தமிழ் திரையுலகில் மூத்த நட்சத்திர நடிகரான பிரபு மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் கதையின் நாயகர்களாக முதன்மையான வேடங்களில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
எழுத்தாளரும், இயக்குநருமான ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் இளைய திலகம் பிரபு , விஜய் வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர், முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பிரதீப் கே. காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொமடி திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் அவியேட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ராகுல் மற்றும் கோகுல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக வருகை தந்து, படக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ‘இளைய திலகம்’ பிரபு புதிய கெட்டபில் கொமடியும், திரில்லரும் கலந்த கதை களத்தில் நடிப்பதால்… இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.