Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கடையில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே செய்யலாம் உருளைக் கிழங்கு சிப்ஸ்

கடையில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே செய்யலாம் உருளைக் கிழங்கு சிப்ஸ்

1 minutes read

கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1/2 கிலோ.
எண்ணெய் – 150 கிராம்.

செய்முறை:

உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More