Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ரோட்டுக்கடை முட்டை கலக்கி… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

ரோட்டுக்கடை முட்டை கலக்கி… வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

1 minutes read

ரோட்டோர கடைகளில் முட்டை கலக்கியை வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 2 மிளகாய்த்தூள், மிளகுத்தூள் – சிறிது
சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா – 2 கரண்டி
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.

பின்பு அதில் சிக்கன் / மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும்.

நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான முட்டை கலக்கி ரெடி!

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More