செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி

1 minutes read

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். எனவே தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 2 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். பிறகு அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பினை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாகப் பிரட்டி விடவேண்டும்.

அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி.

இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.