செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பால் பாயசம்

பால் பாயசம்

0 minutes read

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அல்லது பச்சரிசி – 1 கப்

சர்க்கரை – 1 கப்

பால் – 3 கப்

பாதாம், முந்திரி – தலா – 6

குங்குமப்பூ – சிறிது

ஏலக்காய் துாள் – சிறிது

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

கன்டென்ஸ்டு மில்க் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

அரிசியை தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அரை வேக்காடில் வேக வைத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில் வெந்த அரிசியை சேர்த்து நன்கு கலக்கவும்.

குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்க்கவும்.

பாலில் சாதம் நன்றாக வெந்து, இறுகி வந்ததும், அத்துடன் சர்க்கரை, நெய், வறுத்த பாதாம், முந்திரி ஏலக்காய் துாள், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பால் பாயசம் தயார்!

நன்றி:சமையல் நேரம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.