Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சிக்கன் ஊறுகாய்

சிக்கன் ஊறுகாய்

2 minutes read

தேவையான பொருட்கள்

எலும்புகள் இல்லாத சிக்கன் – 1 கிலோ

மிளகாய் தூள் – 8 மேசைக்கரண்டி

உப்பு – 7 மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு – 1/2 கப்

கடுகுப் பொடி – 2 மேசைக் கரண்டி

சீரகம் மற்றும் வெந்தையப் பொடி – 1 மேசைக்கரண்டி

கரம் மசாலா பொடி – 1/2 மேசைக்கரண்டி

முழு பூண்டு  – 1

கறிவேப்பிலை – 5 இலைகள்

சீரகம் – 2 மேசைக்கரண்டி

கடுகு – 2 மேசைக்கரண்டி

மஞ்சள் – 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் உரித்த முழு பூண்டு பற்களை அதில் போட்டு வதக்கவும்.

அடுத்ததாக கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்.

அடுத்ததாக சிறிய பாத்திரத்தில் மிளகாய்த் தூள், உப்பு, கடுகுப் பொடி, சீரகம் மற்றும் வெந்தயப் பொடி, கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கிளறவும்.

இந்தக் கலவையை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கவும். வதக்கும் போது அடுப்பை சிறுந்தீயில் வையுங்கள்.

மசாலா நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து கலவை சிக்கனிற்குள் இறங்குமாறு வதக்கவும்.

தற்போது சுவையான சிக்கன் ஊறுகாய் ரெடி.

இதை எல்லா உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி மித்திரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More