June 7, 2023 7:25 am

வாட்டர் மெலோன் குல்ஃபி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வாட்டர் மெலோன் வெயில் காலத்தில் அனைவரும் உண்பது மிக நல்லது அப்படி இருக்க அதனை இப்படி செய்து  பாருங்கள்

தேவையான பொருட்கள் 

  • வாட்டர் மெலோன் 1 கப்
  • சர்க்கரை 2 – 3 ஸ்பூன் (அவரவர் விருப்பம்)
  • உப்பு 1 சிட்டிகை (ருசிக்கு)
  • சீவின பாதாம் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
  • ஐஸ்க்ரீம் குச்சிகள் 4

 

செய்முறை 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும்.பெரிய மிக்ஸி ஜாரில் தர்பூசணி துண்டுகள், சர்க்கரை, உப்பை சேர்த்துக் கொள்ளவும்.பிறகு மைய அரைக்கவும்.அரைத்ததை டம்ளர்களில் ஊற்றவும்.பாதாமை துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருகி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.பிறகு வெளியே எடுத்து விடவும்.அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு டம்ளர்களை அதில் வைத்து 1 நிமிடம் கழித்து எடுக்கவும்.

இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*வாட்டர் மெலோன் குல்ஃபி*தயார். செய்து, குடும்பத்துடன்

குறிப்பு:- எனக்கு 1 கப் வாட்டர் மெலோன் துண்டுகளுக்கு, 4 குல்ஃபி வந்தது. ஃபாயில் இருந்தால், டம்ளரை சுற்றி வைத்து நடுவில் ஓட்டை போட்டு குச்சியை சொருகி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். சர்க்கரைக்கு பதில், தேன், சேர்த்தும் அரைக்கலாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்