செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சிக்கன்–முட்டை பொடிமாஸ்!

சிக்கன்–முட்டை பொடிமாஸ்!

1 minutes read

உங்கள் வீட்டில் சிக்கன், முட்டை இருந்தாலே போதும்… சப்பாத்தி, சாதம் எதற்கும் அசத்தலான சைட் டிஷ் செய்யலாம்!
அதுவும் சாதாரண ரெசிபி இல்லாமல், சற்று வித்தியாசமான சுவையில் சிக்கன்–முட்டை பொடிமாஸ் செய்து பாருங்க.

ஒருமுறை சாப்பிட்டாலே அடிக்கடி செய்வதற்கு குடும்பத்தினர் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த ரெசிபி புரோட்டீன் நிறைந்தது என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கும் ஏற்றது. குழந்தைகளுக்கும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – ½ கிலோ

முட்டை – 4

சின்ன வெங்காயம் – 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

சீரகத் தூள் – ½ டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக கழுவி, நீரை வடிகட்டி மிக்ஸியில் 2 முறை மட்டுமே அடித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம் போட்டு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தை கண்ணாடி நிறம் வரும் வரை வதக்கவும்.

அடுத்து தக்காளி சேர்த்து மெலிதாக வதக்கவும்.

பின்னர் அரைத்த சிக்கனை சேர்த்து கிளறி, மூடி வைத்து சுமார் 4 நிமிடம் வேக விடவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, அதனுடன் மசாலா தூள்கள் – மிளகாய், மல்லி, சீரகம், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு – அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

சிக்கனில் நீர் குறைவாக இருந்தால் சிறிது நீர் தெளித்து மூடி வைத்து குறைந்த தீயில் 3–4 நிமிடம் சமைக்கவும்.

பிறகு சிக்கனை ஓரமாக தள்ளி வைத்து, முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதன்மேல் சிறிது உப்பு, ½ டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து மூடி வைத்து 1 நிமிடம் சமைக்கவும்.

மூடியைத் திறந்து முட்டையை லேசாக கிளறி, மீண்டும் 1 நிமிடம் சமைக்கவும்.

இப்போது முட்டையை நன்றாக பொடித்து சிக்கனுடன் கலக்கி, மீதமுள்ள மிளகுத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

🌟 சுவையான சிக்கன்–முட்டை பொடிமாஸ் ரெடி!
இதை சாதம், சப்பாத்தி எதற்கும் சைடாக சாப்பிடலாம். இல்லையெனில் வெறுமனே ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.