செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்; உயிரிழப்பு எண்ணிக்கை 132ஆக அதிகரிப்பு!

இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனம்; உயிரிழப்பு எண்ணிக்கை 132ஆக அதிகரிப்பு!

0 minutes read

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்ட, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ், அவரது செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னதாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

Live Updates

The content will auto-update after 60 seconds
11:13:08
கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தம்கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்புத் துறைமுகத்தின் அனைத்து முனைய நடவடிக்கைகளும் துறைமுக ஆணைக்குழுவால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

November 29, 2025
பஸ்ஸில் சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

பஸ்ஸில் சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்புபுத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் கூரையில் இருந்த 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.

நேற்று முதல் இந்த மீட்பு பணி முன்னெடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதியும் இந்த மீட்பு பணியின் நடவடிக்கைகளை வீடியோ மூலம் நேரடியாக கண்காணித்திருந்தார்.

ஒரு வெளிநாட்டுப் பெண் உள்ளிட்டவர்களே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

10:41:07
வௌ்ளத்தில் சிக்கிய 33 பேர் விமானப்படையினரால் மீட்பு

வௌ்ளத்தில் சிக்கிய 33 பேர் விமானப்படையினரால் மீட்புராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை, ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர், எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் வௌ்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதுடன், அவர்கள் அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

10:31:28
இரணைமடு பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு

இரணைமடு பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்புஇரணைமடுக் குளத்தின் வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் வௌ்ளம் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

10:19:57
உயிரிழப்பு எண்ணிக்கை 132ஆக அதிகரிப்பு

உயிரிழப்பு எண்ணிக்கை 132ஆக அதிகரிப்புஇலங்கையில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளனார் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில்அதிகபட்சமாக 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 35 பேர், கேகாலையில் 09 பேர், மாத்தளையில் 08 பேர், நுவரெலியாவில் 06 பேர், குருநாகலில் 03 பேர் மற்றும் மொனராகலையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட 13,690 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43,925 பேர் 488 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More