இள வயது யோகா ஆசிரியைஇள வயது யோகா ஆசிரியை

அமெரிக்காவில் உள்ள 12வயது சிறுமி ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக இளவயது யோகா ஆசிரியை என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

Jaysea Devoe என்ற 12 வயது சிறுமி, 200 மணிநேர யோகா பயிற்சியை முடித்த பின்னர் யோகா ஆசிரியையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்தான் அமெரிக்க நாட்டிலேயே மிக இளவயது யோகா ஆசிரியை என்று கூறப்படுகிறது.

இவர் California beach town of Encinitas என்ற இடத்திலுள்ள தன்னுடைய வீட்டிலேயே யோகா பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் நான்கு முதல் ஆறு வயதுள்ள மாணவ, மாணவிகள் யோகா பயில்கின்றனர்.

யோகா பயிற்சி குறித்து Jaysea Devoe கூறும்போது, யோகா என்பது ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனதையும் கட்டுப்படுத்த உதவுகிறது. மனதில் வன்முறை, தீய எண்ணங்கள் ஆகியவை தோன்றாமல், நல்ல எண்ணங்களை மட்டும் எழுப்ப யோகா பெரிதும் உதவுகிறது. யோகாவை நாடு முழுவதும் பரப்பிவிட்டால், அந்த நாட்டில் வன்முறையே இருக்காது என்று கூறியிருக்கிறார்.

Untitled

dX-7h4A2tDcTPCgddOJQ1NVRtemfUR85oHoga4h3nhSuxjlmYuvSh0hjkPCGyZquJCR4zt-CIvSpeGlW4qDChw

ஆசிரியர்